செனாப் நதியில் நீர்மின் திட்டம்: டெண்டர் கோரியது மத்திய அரசு: பாகிஸ்தான் அதிர்ச்சி

8

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் சிந்து கிராமம் அருகே செனாப் நதியில் 1,856 மெகாவாட் சாவல்கோட் நீர்மின் திட்டம் அமைப்பதற்காக மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


@1brகாஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், எல்லை தாண்டிய ஒப்பந்த்தை நிறுத்தும் வரை செய்ய முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை கட்டுப்படுத்துகிறது. சிந்து , செனாப் மற்றும் ஜீலன் நதிநீர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நதிகளில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கத்துக்காக பயன்படுத்தலாம் என ஒப்பந்தம் கோருகிறது.

இந்நிலையில், ஒப்பந்தம் ரத்தான பிறகு நீரை பயன்படுத்துவது தொடர்பாக திட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரின் ரம்பான மாவட்டத்தின் சிந்து கிராமத்தில் செனாப் நதியில் 1,856 மெகாவாட் சாவல்கோட் நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. தேசிய நீர்மின் கழகம் இந்த திட்டத்துக்கான டெண்டரை ஆன்லைனில் செப்., 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

செனாப் நதியில் நீர் மின் திட்டம் தயாரிப்பது தொடர்பாக 1960ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் சில பிரச்னைகள் காரணமாக இது செயல்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisement