புகையிலை விற்ற மளிகை கடைக்காரர் கைது

டி.பி.,சத்திரம், டி.பி.,சத்திரம், ஜோதியம்மாள் நகரில், 10க்கும் மேற்பட்ட கடைகளில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

அங்கு, 'ஸ்ரீ லட்சுமி ஸ்டோர்ஸ்' என்ற மளிகை கடையில், சட்ட விரோதாக விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. கடையின் உரிமையாளரான மகேந்திரனை, 40, டி.பி.சத்திரம் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்கு 'சீல்' வைத்தனர்.

Advertisement