அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்யும் எதிர்க்கட்சிகள்: பவன் கல்யாண் காட்டம்

அமராவதி: இந்தியாவை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், குறைத்து மதிப்பிடும் எதிர்கட்சிகளை கண்டித்தும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பவன் கல்யாண் பதிவிட்டுள்ளதாவது:
சிறு,மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மருந்து மற்றும் விவசாயம் ஆகியவற்றை வலுப்படுத்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது 4வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலுவாக செயல்படுகிறது, தேசிய நலன்களைப் பாதுகாக்கிறது, சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியாது.
இந்தோ-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் கவனக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எதிர்கட்சிகளின் வார்த்தைகள், இந்தியாவின் கண்ணியத்தை சேதப்படுத்துவதாகவும், அமெரிக்க நலன்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து இந்தியாவின் உலகளாவிய நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கவனக்குறைவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர், அவர்கள் அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்வதாகத் தெரிகிறது.
இது புதிய இந்தியா, இனி தலைவணங்கும் நாடு அல்ல. தெளிவுடன் பேசி, தேசிய நலன்களுக்காக செயல்படும் நாடு. எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காமல், அனைத்து குடிமக்களுக்கும் நெகிழ்ச்சியான, தன்னம்பிக்கை கொண்ட பொருளாதார எதிர்காலத்தை உருவாக்குவதில் என்டிஏ அரசு கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது.
இவ்வாறு பவன் கல்யாண் பதிவிட்டுள்ளார்.













மேலும்
-
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படம் - 'பார்க்கிங்' ; சிறந்த இசையமைப்பளர் ஜிவி பிரகாஷ்
-
சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது: சீமான் கேள்வி
-
திரும்பத் திரும்ப பழி சுமத்தும் ராகுல்; அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது தேர்தல் கமிஷன்!
-
ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கிய கிளார்க்கிற்கு ரூ.30 கோடி சொத்து : லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி
-
போலீசாருகே மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்; அதிர்ச்சி வீடியோ வெளியிட்டு அண்ணாமலை வருத்தம்
-
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி: 7.5 சதவீதம் அதிகம்