ஹைதராபாத்தில் விமானப் பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்பில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்

32


ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் ரூ.40 கோடி மதிப்புள்ள 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது; உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையப் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில், பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த கார்கோ பார்சல்களை சோதனையிட்டதில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரு.40 கோடி என தெரிய வந்துள்ளது.


பாங்காக்கில் இருந்து ஹைட்ரோபோனிக் கஞ்சா (Hydroponic Ganja) வாங்கி, துபாய் வழியாக இந்தியாவுக்கு கடத்தியுள்ளார். நேரடியாக பாங்காக்கில் இருந்து வரும் பயணிகளை சோதனை செய்யும் இந்திய விமான நிலையங்களின் கவனத்தை தவிர்க்க, துபாய் சென்று வந்துள்ளார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என தெரிவித்தனர்.

Advertisement