ஜெய்ஸ்வால் சதம் விளாசல்; கில், கருண் நாயர் ஏமாற்றம்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். அதேவேளையில், கேப்டன் கில் மற்றும் கருண் நாயர் ஏமாற்றம் அளித்தனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் குவித்தன.
நேற்று 2ம் ஆட்டத்தில் 23 ரன்கள் பின்னிலையில் 2வது இன்னிங்சை இந்திய அணி நேற்று தொடங்கியது. கே.எல்.ராகுல் (7), சாய் சுதர்சன் (11) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். இதனால், நேற்று நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார். 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஜெய்ஸ்வால் (51), ஆகாஷ் தீப் (4) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ஆகாஷ் தீப், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் சேர்ந்து 100 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஆகாஷ் தீப் 66 ரன்களில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி விளையாடி வருகிறது.
உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கில் (11), கருண் நாயர் (17) ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.
தற்போது வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
ஓவலில் ரோகித்
இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா, ஓவல் மைதானத்திற்கு வந்திருந்தார்.

மேலும்
-
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!
-
ஆகஸ்ட் 5 ல் 26 அம்ச கொள்கைகள் வெளியீடு: வங்க தேச இடைக்கால அரசு அறிவிப்பு
-
நயினார் நாகேந்திரன் உண்மையை பேச வேண்டும்; சொல்கிறார் ஓபிஎஸ்
-
சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார்
-
ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்