ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

21

வாஷிங்டன்: ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.


ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.


இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தொடங்கியது. இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கடும் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டு உள்ளார்.


இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது. அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப வேண்டி இருந்தது.
நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது பொருத்தமானது என்று நாங்கள் நினைக்கவில்லை. எனவே நாங்கள மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


நமது மக்களின் பாதுகாப்பிற்காக நான் இதைச் செய்கிறேன். நீங்கள் அணுசக்தி பற்றிப் பேசும் போது, நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement