வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்புடன் விளையாடிய சிறுவன்

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை சிறுவன் கையில் பிடித்து விளையாடிய வீடியோ வைரலானது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டி விரிவாக்கப்படுதியில் உள்ள ஒரு வீட்டில் சாரைப்பாம்பு வந்துவிட்டது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்து அந்த பாம்பை பிடித்துவிட்டனர்.

அந்த வீடியோவில், சிறுவன் பாம்பின் வாலைப் பிடித்து துணிச்சலாக விளையாடுகிறான்.இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்தது, சிலர் அச்சம் தெரிவித்தாலும், சிறுவனின் துணிச்சலைப் பாராட்டியும் உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சிறுவன் பிடிபட்ட சாரைப்பாம்பை துளியும் பயமே இல்லாமல் துணிச்சலாகஅந்த பாம்பின் வாலைப்பிடித்து விளையாடினான். இந்த வீடியோ வைரலானது.

சிறுவன் விளையாடிய அந்த சாரைப்பாம்பு பின்னர் கோனேரிப்பட்டி ஏரிக்கரையில் விடுவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் பீஹாரில் ஒரு சிறுவன் பாம்பை கடித்ததால் உயரிழந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது பாம்புடன் விளையாடிய சிறுவன் வீடியோ வைரலானது.

Advertisement