அமெரிக்காவுடன் பொருளாதார உறவு முக்கியமானது; சொல்கிறார் சசிதரூர்

6

மும்பை: 'அமெரிக்காவுடனான நமது பொருளாதார உறவு மிக முக்கியமானது' என காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருளாதாரத்தை கடுமையாக விமர்சித்ததற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு சசிதரூர் அளித்த பதில் பின்வருமாறு: எனது கட்சித் தலைவர் கூறியது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அவர் அப்படிச் சொல்வதற்கு அவரவர் காரணங்கள் உள்ளன.


அமெரிக்காவுடனான நமது பொருளாதார உறவு மிக முக்கியமானது. 90 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். அதை இழக்கவோ அல்லது அது கணிசமாகக் குறையவோ முடியாது.

நியாயமான ஒப்பந்தம்

இந்தியாவிற்கு நியாயமான ஒப்பந்தம் கிடைக்க சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். நமது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மற்ற நாடுகளுடன் நாம் பேச வேண்டும்.


அப்போது தான் அமெரிக்காவில் நாம் இழக்கக்கூடிய சிலவற்றை ஈடுசெய்ய முடியும். நமது வர்த்தக பேச்சுவார்த்தை குழுவினரை நாம் ஆதரிக்க வேண்டும்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


யாருக்குத் தெரியும்!




புதிய துணை ஜனாதிபதி குறித்து எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் அளித்த பதில்: ஆளும் கட்சி யாரையாவது நியமிப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் வாக்காளர்களின் அமைப்பு எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் எதிர்க்கட்சிகளையும் கலந்தாலோசிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் யாருக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement