திருப்புவனத்தில் ஒரே நாளில் மாறிய பருவ நிலையால் அவதி

திருப்புவனம் : திருப்புவனத்தில் ஒரே நாளில் பருவநிலை மாறியதால் மீண்டும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

திருப்புவனத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. வெயிலில் வெளியே செல்லவே முடியவில்லை. வெயிலின் தாக்கம் காரண மாக சாலையோர சிறு வியாபாரிகள் பலரும் பரிதவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. 79.2 மி.மீ., மழை பெய்தும் நேற்று காலை ஆறு மணி முதல் வெயில் வாட்டி வதைத்தது. தெருக்களில் மழை பெய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. வெயில் காரணமாக புழுக்கத்தால் பொதுமக்கள் தவித்தனர்.

Advertisement