கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்

அகில இந்திய வானொலியில் பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்' நிகழ்ச்சி நடக்கும் போது அதை தமிழில் மொழி பெயர்த்து வழங்கி வந்த, சென்னை வானொலி நிலைய உதவி இயக்குநர் சுதர்சனுக்கு பிரதமரின் நேரடி மேடை பேச்சின் ஹிந்தி உரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறையல்ல. இது பதினொன்றாவது முறை என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் சுதர்சன்.

'வானொலியில் உரை, நாடகம், சித்திரம் என பல்வேறு வடிவங்களில் மொழியாக்கம் செய்வது வழக்கம் தான். நிகழ்ச்சி அமைப்பாளராக 35 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த வளமான அனுபவம் தான் பிரதமரின் மேடை பேச்சின் போதும் கைகொடுத்தது' என்று ஆரம்பித்தார் சுதர்சன்.

நீங்களும் பிரதமர் மோடியின் முதல் குரலும்... எப்படி கிடைத்தது இந்த வாய்ப்பு.



1995 முதல் வானொலியில் மொழிபெயர்ப்பு செய்தாலும் அதிகாரப்பூர்வமாக 2000ம் ஆண்டு முதல் ஆளுனர், குடியரசுத்தலைவர் உரையை மொழிபெயர்த்து வருகிறேன். திருப்புமுனை ஏற்பட்டது 2014 அக். 3ல் தான். அன்று (விஜயத சமி) தான் பிரதமர் மோடியின் மனதின் குரல் (மன் கீ பாத்) ஆரம்பிக்கப்பட்டது. கொடி நாளுக்கும் சுதந்திர தினத்திற்கும் உரையாற்றுவது பிரதமரின் வாடிக்கை. மோடி மாதந்தோறும் உரை ஆற்றுவதாக சொன்னதும் முதலில் புரியவில்லை. கன்னிப் பேச்சை மொழி பெயர்த்த பின்பே, தமிழக மக்களுக்கு பிரதமர் மோடியின் அன்பை கொண்டு போய் சேர்க்க வேண் டும் என்ற நோக்கம் புரிந்தது.

'மனதின் குரல்' மொழி பெயர்ப்பு பிரதமரை எட்டியதா



கொரோனா தொற்று காலத்தில் 'மனதின் குரலை மக் களிடம் எளிதாக சேர்க்க முடிந் தது பெரிய பாக்கியம். பிரதமர் அடிக்கடி சொல்வார், 'நோக்கம் நேரியதானதால் அதன் விளைவும் சீரானதாக இருக்கும்' என்று. வெற்றி தோல்வி, பாராட்டுகளை தாண்டி நல்ல முயற்சி மேற் கொண்ட திருப்தி கிடைக்கிறது. இதை பிரதமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

முதல் மொழிபெயர்ப்பு மேடை எப்போது



2020, நவ. 20ல் டி.ஐ.பி.ஆர்., இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மூலம் சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத் தது. மேடையில் அப்போதைய முதல்வர் பழனிசாமி இருந்தார். அமித்ஷா ஹிந்தி பேச்சை தமி ழுக்கு மொழி பெயர்த்த போது இரண்டு இடங் களில் அதிக கைத் தட்டல் கிடைத்தது. கைத்தட்டல் ஓய்வதற் காக நான் மொழிபெ யர்ப்பை பாதியில் நிறுத்தினேன். நான் முடித்து விட்டதாக நினைத்து அமித்ஷா ஆரம்பித்தார். பின் புரிந்து கொண்டு உற் சாகமாக கை காண்பித்து பேச்சை தொடர அனுமதித் தார். அவர் சொன்ன ஒரிஜினல் கருத்தை மொழிபெயர்க்கும் போது கைத்தட்டல் கிடைத்தால் அவருக்கு தான் சொந்தம்; கைத் தட்டல் வாங்கித்தருவது நம் வேலை.

பிரதமர் மோடிக்கு மொழிபெயர்ப்பு



2021 பிப். 14ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடிக்கு முதன்முதலாக மொழிபெயர்ப்பு செய்தேன். பேசி முடித்தபின் அவரது அறைக்கு வெளியே பாதுகாப்பு படையினர் காத் திருக்க சொன்னார்கள். முதன் முறையாக பிரதமரை நேருக்கு நேராக பார்த்து பிரமித்து போனேன். 'நன்றி, நன்றாக செய்தீர்கள்' என்று சொன்னார்.

அடுத்தடுத்து வாய்ப்புகள்



அதே பிப்ரவரியில் கோவை கொடீட்சியா அரங்கில் மொழி பெயர்த்தேன். 3வது முறை 2022ல் கிடைத்தது. மே 26ல் நேரு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மொழியாக்கம் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர், என் முதுகில் இரண்டு முறை தட்டிய போது சாதித்தது போல் உணர்ந்தேன். அடுத்த டுத்து 10 வாய்ப்புகள் கிடைத்தன. ஒருமுறை காசித்தமிழ்ச்சங்கம் நிகழ்ச் சிக்காக மாநிலம் தாண்டி சென்று மொழி பெயர்த்தேன்.

அரசியல் மொழிபெயர்ப்பு செய்தது...



துாத்துக்குடியில் அரசியல் கூட்டத்தில் நான் தமிழில் பேசும் போது பிரதமர் மோடி ரசித்து கைகளால் தாளம் போட ஆரம் பித்தார். 'துாத்துக்குடியை வேற லெவலுக்கு கொண்டு போய்ட் டீங்க என்று பிரதமர் சொன்னதாக அண்ணாமலை பாராட்டிய போது மனம் கூத்தாடியது.

அரசு விழாக்களில் திட்டங்கள் பற்றிய மொழி பெயர்ப்பில் பிரத மரின் உணர்வுகளை முழுவது மாக வெளிப்படுத்த முடியாது. அதில் தரவுகள் (டேட்டா), புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும். துள்ளல் இருக்காது. அரசியல், கலாசாரம், ஆன் மிக விழாக்கள் மக்களின் இதயங்களோடு தொடர்புட யவை. சமீபத்தில் அரியலுாரில் நடந்த ராஜராஜசோழன் குறித்த மொழிபெயர்ப்பில், 'மக்களின் வாழ்வியல் தொடர்பான, மரபி யல், பாரம்பரியம் தொடர்பான வரலாற்று உண்மைகளை தெரி வித்த போது, மக்களின் உணர் வுகள் 'ஊடும். பாவும் போல' பின்னி பிணைந்திருந்தது. அந்த உணர்வுகளை, வரலாற்று உண் மைகளை மறுபடி மக்களிடம் மொழிபெயர்ப்பின் வாயிலாக கொண்டு சேர்த்த போது மக்க ளின் உள்ளத்திற்குள் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்தது.

ஆங்கிலம், இந்திய மொழிகள் மொழிபெயர்ப்பு... எது கடினம்.



ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழியாக்கம் செய்வதை விட ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் இருந்து தமிழ் மொழியாக்க மொழியாக்கம் செய்வது எளிது. இந்திய மொழிகளில் உள்ள சொற்களின் வடிவமைப்பு, வாக்கிய வடிவமைப்பு 70 முதல் 80 சதவீதம் ஒற்றுமையாக காணப்படும். சொற்களின் பின் புலத்தை புரிந்து கொண்டால் எளிதாக உதட்டசைவு வரை மொழி பெயர்க்கலாம். ஆங்கி லத்தில் அத்தகைய சொற்றொ டர்களை அடக்குவது கடினம். எனவே தமிழ் மொழியை சிதைக்காமல் எல்லோருக்கும் புரியக்கூடிய எளிய சொற்களால் வார்த்தைகளை கட்டமைக்கிறேன் என்றார்.

Advertisement