கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மதிகோன்பாளையம், தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் கடந்த, 31 அன்று இரவு, 11:30 மணிக்கு ரோந்து சென்றார். அப்போது,


அன்னசாகரம் ஏரியில் இருந்து, குளியனுார் திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்த, டிப்பர் லாரியை நிறுத்தியபோது, அதன் ஓட்டுனர் தப்பி சென்றார். லாரியை சோதனை செய்ததில் அதில், 2 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசில் ஒப்படைத்தார். புகார்படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement