பள்ளப்பட்டி பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் முதலிடம்


அரவக்குறிச்சி :குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்து, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டி, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இளையோர் பிரிவில் இறுதி போட்டியில் ஈசநத்தம் ஹாஜிமீரா மெட்ரிக் பள்ளியுடன், 3--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.


மூத்தோர் பிரிவு அரையிறுதி போட்டியில், ஹாஜி மீரா மெட்ரிக் பள்ளியுடன், 2--0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டியில் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை, 3--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. மிக மூத்தோர் பிரிவில் இறுதி போட்டியில், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியுடன் மோதி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.மாணவியர் இளையோர் பிரிவு இறுதி போட்டியில், ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியுடன் மோதி, 3-2 என்ற கோல்கணக்கில் வென்று முதலிடம் பெற்றனர். மூத்தோர் மாணவியர் பிரிவு இறுதி போட்டியில், ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியை, 1--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர், பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement