வங்கதேச மாடல் அழகி கோல்கட்டாவில் கைது

4

கொல்கட்டா: போலி ஆவணங்களை வைத்து கோல்கட்டாவில் வசித்து வந்த வங்கதேச மாடல் அழகியை போலீசார் கைது செய்தனர்.

பஹல் காம் தாக்குதலுக்குப் பின், நாடு முழுதும் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில், அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்ட விரோதமாக ஊடுருவிஉள்ளனர்.

இந்நிலையில், கொல்கட்டா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வங்க தேச மாடல் அழகி சாந்தா பால் என்பவர் சிக்கினார்.

கடந்த 2023ம் ஆண்டு மேற்கு வங்கத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அவர், 'மிஸ் ஆசியா குளோபல்' அழகிப் பட்டம் வென்றவர்.

கொல்கட்டாவில் தங்கி விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சாந்தா பால், விளம்பர மாடலாகவும் உள்ளார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விசா முடிந்த பிறகும் சாந்தா நா டு திரும்பவில்லை.

மேலும் வீடு வாடகைக்கு எடுக்க ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை போலியாக அச் சிட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாந்தா பாலுக்கு 8-ம் தேதி வரை காவல் வழங்கப்பட்டது.

Advertisement