வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு

வானுார் : வானுார் அருகே வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

வானுார் அடுத்த ஆப்பிரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மனைவி நாகவள்ளி. இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் நாக பாம்பு புகுந்தது. பாம்பை பார்த்ததும் அலறியடித்து வெளியே ஓடி வந்தார்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று 4 அடி நீளமுள்ள நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement