தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த கீழ்மாவிலங்கையில் தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.,இளைஞரணி சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார்.

இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் பாபு முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேச்சாளர்கள் பாரி, குடியரசு ஆகியோர் பேசினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட அவைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ேஹமநாதன் நன்றி கூறினார்.

Advertisement