அரசு ஆண்கள் பள்ளி முன் வேகத்தடை அமைக்கப்படுமா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் - கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இச்சாலை வாகன போக்குவரத்து மிகுதியான சாலையாக உள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மதிய உணவு இடைவேளை நேரங்களில் அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றனர். அந்தநேரத்தில் அதிகவேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையை கடக்கும் மாணவர்கள் பலர் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement