மழைநீர் வடிகால், ஆழ்துளை கிணறு அமைக்க தீர்மானம்

மேலுார் : மேலுார் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. பொறியாளர் முத்துக்குமார், எழுத்தர் ஜோதி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம் ஆண்டுக்கு ரூ. 2. 45 லட்சம் என முடிவு செய்யப்பட்டது.

முத்தமிழ் நகர், தெற்குப்பட்டி, எஸ்.எம்.,நகர், காந்தி நகர், கம்பர் தெரு, கோமதியாபுரம் பகுதிகளில் ரூ. 44 லட்சத்தில் மழை நீர் வடிகால் அமைத்தல், வார்டு எண்கள் 10, 20, 16, 21, 1, 26, 16, 24, 27 ல் ரூ. 20 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

புதிய பஸ் ஸ்டாண்டில் ரூ.5 லட்சத்தில் காத்திருப்போர் அறை, நடைபாதைகளில் சோ லார் பேனல் மின்விளக்கு அமைத்தல், ஸ்டார்நகர், நொண்டி கோவில்பட்டியில் ரூ. 11 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் அமைப்பது, வார்டு 10, 20, 21, 24, 25, 26ல் ரூ. 2.50 லட்சத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதித்தல், 27 வார்டுகளில் ரூ.3 லட்சத்தில் அடிகுழாய் பழுது நீக்குவது உள்ளிட்ட 47 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Advertisement