16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

1

சென்னை: 'தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று முதல் 5ம் தேதி வரை, 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அதன் அறிக்கை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை 7:00 மணிக்கு முந்தைய 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுச்சேரி பாகூரில் 13 செ.மீ., கடலுார் மாவட்டம் வனமாதேவி, தஞ்சாவூர் மாவட்டம் கீழ் அணைக்கட்டு பகுதியில், தலா 11 செ.மீ., மழை பதிவானது.



மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று முதல் 5ம் தேதி வரை, 16க்கும் அதிகமான மாவட்டங்களில் மழை பெய்யும்.

@twitter@https://x.com/dinamalarweb/status/1951800985527124139twitter

கோவை, நீலகிரி, கடலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement