தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: சென்னை ஐகோர்ட் வேதனை

13

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக சென்னை ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.



கடலூர் கல்லூரி மாணவர் ஜெயசூர்யா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆனால் அவரின் மரணம் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி தந்தை முருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.


மாற்று சமுதாய பெண்ணை தமது மகன் காதலித்தாகவும், பெண்ணின் உறவினர்கள் தரப்பில் மகனுக்கு மிரட்டல்கள் இருந்ததாகவும் வழக்கில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, நீதிபதி வேல்முருகன், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இது வேதனையை தருகிறது. ஆணவக் கொலை அதிகரித்தாலும் உண்மை வெளிவருவதில்லை என்று வேதனை தெரிவித்தார்.


இதனிடையே, ஜெயசூர்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement