இந்தியாவுக்கான வரியை உயர்த்துவேன்: எல்லை மீறும் டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்; இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
கச்சா எண்ணெய்க்காக ரஷ்யாவுக்கு இந்தியா செலுத்தும் பணம், உக்ரைன் போரில் பயன்படுத்தப்படுகிறது என்பது அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க டிரம்ப் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ஆக.7ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வருகிறது.
இந் நிலையில், இந்தியாவுக்கான வரியை மேலும் உயர்த்துவேன் என்று அதிபர் டிரம்ப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதுடன் அதை வெளிச்சந்தையில் இந்தியா விற்று லாபம் பார்க்கிறது.
ரஷ்ய தாக்குதலில் உக்ரேனியர்கள் பலியாவதை கண்டு இந்தியாவுக்கு கவலை இல்லை. இதற்காகவே இந்தியாவின் மீதான வரியை கணிசமாக உயர்த்திக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.






மேலும்
-
கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் நியாயமற்றது என மத்திய அரசு பதிலடி டிரம்புக்கு இந்தியா பதிலடி
-
வர்த்தக துளி
-
அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்
-
மத்திய அரசின் நிதி சார் திட்ட முகாம்கள் 30 நாளில் 5.33 லட்சம் விண்ணப்பங்கள்
-
கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு
-
கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து புத்தொழில் துவங்க விரும்பினால் உதவி தமிழக அரசின் 'நெக்ஸ்ட் லீப்' திட்டம்