சீருடையில் கதறும் சிஆர்பிஎப்., பெண் காவலர்: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

19

சென்னை: தமிழகத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஜம்மு-காஷ்மீரில் நமது நாட்டின் எல்லைகளில் நேர்மையாக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிஆர்பிஎப் ஜவான், கடந்த ஜூன் மாதம் வேலுார் மாவட்டம் காட்பாடி அருகே தனது வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் அது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

@twitter@https://x.com/annamalai_k/status/1952332140559180180twitter

சீருடையில் இருக்கும் ஒருவர், ஆன்லைனில் நீதிக்காக கெஞ்ச வைக்கும் அளவுக்கு எந்த வகையான நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது?


@block_B@இது வெறும் சட்டமீறல் மட்டுமல்ல, திமுக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் நமது தேசத்தின் பாதுகாவலர்கள் உதவிக்காக மன்றாடுகிறார்கள்.block_B


இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தன் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை யாரோ ஒருவர் வீடு புகுந்து திருடிச்சென்று விட்டதாக, கதறி அழுதபடி சிஆர்பிஎப்., பெண் காவலர் கூறும் அந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தன் தாயார் மாடு மேய்க்கச்சென்றபோது, இந்த சம்பவம் நடந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கம்பி வேலி போடப்பட்ட ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement