நமது ஹீரோக்களுக்கு சபாஷ்: வெற்றிக்குப் பிறகு இந்திய அணியிடம் மன்னிப்பு கோரினார் சசி தரூர்

2


புதுடில்லி: நமது ஹீரோக்களுக்கு சபாஷ் என ஓவல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியிடம் காங்கிரஸ் எம்பி மன்னிப்பு கேட்டார்.


ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று வெற்றிக்காக இந்திய கிரிக்கெட் அணியைப் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாராட்டினார். இந்த வெற்றியில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், போட்டியின் போது இந்திய அணி மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாகக் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்ன ஒரு வெற்றி! இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபார வெற்றி பெற்றதில் இந்தியாவுக்கு மிகவும் உற்சாகமாகவும், பரவசமாகவும் இருக்கிறது.


காட்டப்பட்ட மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் ஆர்வம் வெறுமனே நம்பமுடியாதவை. இந்த அணி சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், அணி குறித்து முன்னதாக சந்தேகம் தெரிவித்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டார். அவர் கூறியதாவது:


நேற்று முடிவு குறித்து நான் ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தியதற்கு வருந்துகிறேன். நம் ஹீரோக்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சசி தரூர், தொடரின் போது விராட் கோலியை மிஸ் செய்வதாகவும், ஓவல் டெஸ்டின் போது இன்னும் அதிகமாக மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement