அன்புமணி பொதுக்குழு கூட்டம்: தடை கேட்டு ராமதாஸ் வழக்கு

4

சென்னை: அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,09ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது. இது அக்கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.



ராமதாசால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவரது பதவிக்காலம் மே 28 அன்றுடன் நிறைவு பெற்றது. அவர் தன்னைத் தானே தலைவர் என சொல்லிக் கொண்டு செயல்படுகிறார். அடுத்த தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உள்ளது. குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழுவை அன்புமணி கூட்டி உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement