ஆக.,31 ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் ஆக.,31 அன்று சீனா செல்ல உள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு பிறகு மோடி, அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியா சார்பில் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சீனா சென்று பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் 31ம் தேதியன்று பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். அப்போது, பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்தியா சீனா இடையிலான உறவு குறித்த பேச்சுவார்த்தை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் முயற்சி எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த பயணத்துக்கு முன்னதாக ஆக.,30ம் தேதியன்று பிரதமர் மோடி ஜப்பான் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இது முடிந்த பிறகு அங்கிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மேலும்
-
தாய்ப்பாலை தானம் வழங்கி சாதனை; தாராள மனசு பெண்ணுக்கு குவியும் பாராட்டு!
-
விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்
-
இந்தியா எப்படி வளர்ந்த நாடாகும்; கேள்வி கேட்ட பிபிசி தொகுப்பாளரை வாயடைக்கச்செய்த ஹர்தீப் சிங் புரி!
-
இந்தியாவுக்கு மேலும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்
-
உலகத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம்: டிரம்ப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்
-
ஜாதி ரீதியாக ஒதுக்கப்படுகிறேனா இல்லையான்னு நான் தான் சொல்லணும்; அன்புமணிக்கு துரைமுருகன் 'சுளீர்'