ஹமாஸ் உடன் போரின் முதன்மை நோக்கங்கள் என்ன? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!

3

ஜெருசலேம்: ஹமாஸை முற்றிலுமாக அழிப்பதும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்பதுமே, போரின் முதன்மை நோக்கங்களாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தினார்.


காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 61,158 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 151,442 பேர் காயமடைந்துள்ளனர்.


இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: இஸ்ரேல் உடன் காசாவை இணைக்க மாட்டோம். இறுதியில் அதை ஒரு இடைக்கால நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க விரும்புகிறோம். ஹமாஸை முற்றிலுமாக அழிப்பதும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரையும் பத்திரமாக மீட்பதும் தான் போரின் முதன்மையான நோக்கங்களாகவே உள்ளன.


ஹமாஸ் தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தால், மோதல் விரைவாக, ஒருவேளை நாளைக்கு கூட முடிவுக்கு கொண்டு வரக்கூடும்.அச்சுறுத்தல்களைத் தடுக்க காசாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


இந்த நடவடிக்கை, காசா இனி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதி செய்வதற்கான ஒரு அவசியமான நடவடிக்கை.இஸ்ரேலின் எல்லைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில்அப்பாவிகள் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement