வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னறிவிப்பு இன்றி யாரும் நீக்கப்பட மாட்டார்கள்: தேர்தல் கமிஷன் உறுதி

புதுடில்லி: பீஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பு இன்றி நீக்கப்பட மாட்டார்கள் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
பீஹாரில், விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளன. பார்லிமென்டிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் புதிதாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கொள்கை ரீதியாகவும், இயற்கை நீதியின் கொள்கைகளை உறுதியாக கடைபிடிப்பதன் மூலமாகவும், ஆக., 1 ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள். அதற்கு முன்னர் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கருத்துகள் கேட்கப்படும். சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்குவதற்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்.
எந்த ஆவணமும் வழங்க முடியாமல் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் வாக்காளர்கள், உரிய ஆவணங்களை பெறுவதற்கும் வழி ஏற்பாடு செய்யப்படும். தகுதி வாய்ந்த வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்பதற்காக, விழிப்புணர்வு பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் விடுபடக்கூடாது என்ற நோக்கத்திலும் 246 நாளிதழ்ளில் ஹிந்தி மொழியில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. கிராமப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இவ்வாறு அந்த பிரமாணப் பத்திரத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.






மேலும்
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கோரிக்கை
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 360 சாலைகள் மூடல்
-
மலையேற்ற சுற்றுலாவில் 97 சிகரங்களுக்கு கட்டண சலுகை: நேபாள அரசு அறிவிப்பு
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
-
கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் செயல்படுத்தப்படுமா: தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை உலகமே பார்த்தது; பிரதமர் மோடி பெருமிதம்