ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஆக.13ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.



இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கை விவரம்;


கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் 13.08.2025 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும்.


அதுபோது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு துரைமுருகன் கூறி உள்ளார்.


இந்த கூட்டத்தில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement