தண்ணீருக்காக மறியல்

உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகேயுள்ள வகுரணி கிராமத்திற்கு கூட்டுக்குடிநீர் வருவதில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன்பு அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் ஆய்வில் அயோத்திபட்டி கிராமத்தில் அனுமதி பெறாத குடிநீர் குழாய்களால் தண்ணீர் வரவில்லை என கண்டறிந்து இணைப்பை துண்டித்தனர்.

இதனால் தங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனக்கூறி அயோத்திபட்டி கிராம மக்கள் பேரையூர் ரோட்டில் நேற்று காலை அரைமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. சேடபட்டி போலீசார் சமரசம் செய்தனர்.

Advertisement