மனமகிழ் மன்றம்:  தடைகோரி வழக்கு

மதுரை:கீழக்குயில்குடி சிவப் பிரகாஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

செக்கானுாரணியில் அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி, கோயில், திருமண மண்டபங்கள், மாணவர் விடுதிகள் உள்ளன. இப்பகுதி மனமகிழ் மன்றம் அமைக்க தகுந்த இடம் அல்ல. மது அருந்துவோரால் விபத்து ஏற்படும். அனுமதிப்பது விதிமீறலாகும். உரிமம் வழங்கும் முன் மக்களிடம் கருத்து கோர வேண்டும். தனியார் மனமகிழ் மன்றம் அமைக்க உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜன் ஆஜரானார்.

அரசு பிளீடர் திலக்குமார், 'இதுவரை உரிமம் வழங்கவில்லை. மனு நிலுவையில் உள்ளது' என்றார்.

நீதிபதிகள் கலெக்டர், மதுவிலக்கு மற்றும் கலால்துறை உதவி கமிஷனர், திருமங்கலம் தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Advertisement