நெல் மூடைக்கு ரூ.60 வசூல் தி.மு.க.,வினர் மீது குற்றச்சாட்டு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே வைரவநத்தம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைக்கு ரூ.60 வாங்குவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொள்முதல் நிலையத்திற்கு விட்டங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வரும் நெல்லை உலர்த்தி, சுத்தப்படுத்தி எடை வைத்து ஏற்றுவதற்கு என அரசு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கிறது. ஆனால் கொள்முதல் நிலையத்தை நிர்வகிக்கும் தி.மு.க.,வினர் கட்டாயப்படுத்தி ரூ.60 வசூல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: 4 நாட்களாக மையத்தில் கொட்டி வைத்துள்ள நெல் குவியலை மழையில் இருந்து பாதுகாக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மையம் நடத்தும் ஆளும் தரப்பினர் எங்களிடம் மூடைக்கு ரூ.60 வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர். பணம் தராதவர்கள் நெல்லை தாமதப்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு விளைச்சலின்றி ஏக்கருக்கு ஒரிரு மூடை தான் கிடைத்தது. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் இது போன்ற கட்டாய வசூலால் கூடுதல் நஷ்டம் அடைகிறோம் என்றனர்.
மேலும்
-
கட்டட மேஸ்திரி கொலை தி.மு.க., பிரமுகர் வெறி
-
கைதியை தாக்கிய விவகாரம்: 23 போலீசார் மீது வழக்கு
-
உத்தராகண்ட் வெள்ள பாதிப்பு; சமச்சீரான கொள்கை அவசியம்!
-
சமூக நீதி பேசும் யாரும் கவின் கொலையை கண்டிக்கவில்லை-- டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
-
மாற்றுக்கட்சியினரை சேர்க்க முடியாமல் தி.மு.க., திணறுகிறது: ஆர்.எஸ்.பாரதி
-
இன்ஜி., மாணவர் விபத்தில் பலி