மஹா., அரசியலில் திடீர் திருப்பம்; பாஜ முதல்வரை சந்தித்த ராஜ் தாக்கரே!

மும்பை: மஹாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக பாஜ முதல்வர் தேவேந்திர பட்னவிஸை ராஜ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார்.
மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மீண்டும் கைகோர்த்துள்ளனர். அப்போது, பாஜவின் மொழி கொள்கை விவகாரத்தை கடுமையாக விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும், ராஜ் தாக்ரேவின் மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனாவும் இணைந்து மகாராஷ்டிரா கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. ஷஷாங் ராவ் தலைமையிலான அணி 14 இடங்களிலும், பாஜ அணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தல் முடிவுகள் மஹாராஷ்டிராவில் எதிர்வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தாக்கரே சகோதரர்களுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஜ முதல்வர் தேவேந்திர பட்னவிஸை ராஜ் தாக்கரே சந்தித்து பேசியுள்ளார். இதனால், பாஜவுடன் கைகோர்க்க தாக்கரே சகோதரர்கள் திட்டமிட்டுள்ளார்களா? என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
சமீபத்தில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு கடைசி வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் அவரும், அவரது கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்த நிலையில் இத்தகைய சந்திப்பு நடந்துள்ளது.




மேலும்
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா
-
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்: விண்வெளி நிலைய பயணம் பற்றி சுபான்ஷு சுக்லா பெருமிதம்
-
உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்
-
சடங்குகள் மூட நம்பிக்கைகளா?
-
வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்!