குழந்தைகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலி; மஹாராஷ்டிராவில் சோகம்

மும்பை: மஹாராஷ்டிராவில் குழியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி குழந்தைகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தார்வா பகுதியில் அமையவிருக்கும் புதிய ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, இராட்சத தூண்கள் அமைப்பதற்காக, ஆழமான குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இந்த சூழலில் கடந்த சில தினங்களாக மஹாராஷ்டிராவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தூண்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட ஆழமான குழிகளில், கிணறு போல தண்ணீர் தேங்கியுள்ளன.
இந்த நிலையில், நேற்று அந்த வழியாக சென்ற ரெஹ்மான் அஸ்லாம் கான்,13, கொலு பாண்டுரங் நர்னவாரே,10, சோம்யா சதீஷ் காத்சன்,10, வைபவ் ஆஷிஷ் போத்லே,14, ஆகிய 4 குழந்தைகள் அந்த கட்டுமான குழியில் தவறி விழுந்துள்ளனர். நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் எந்த முன்னெச்சரிக்கை பலகையோ, இரும்பு தடுப்புகளோ அமைக்காதது தான் குழந்தைகளின் உயிரிழப்புக் காரணம் என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும்
-
மணல் கடத்தல் மாபியாக்களுக்கு ஒத்துழைக்கும் அரசு: சந்தேகம் எழுப்புகிறார் நயினார்
-
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை: ராஜ்யசபாவில் நிறைவேறியது மசோதா
-
வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம்: விண்வெளி நிலைய பயணம் பற்றி சுபான்ஷு சுக்லா பெருமிதம்
-
உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்
-
சடங்குகள் மூட நம்பிக்கைகளா?
-
வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்!