இந்திய 'ஏ' அணியில் ரோகித் * ஆஸி., தொடருக்கு தயாராக...

புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய 'ஏ' அணியில் களமிறங்க உள்ளார் ரோகித் சர்மா.
இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா 38. சர்வதேச 'டி-20', டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்து 2027 ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது பிரிமியர் தொடருக்குப் பின் எவ்வித சர்வதேச போட்டியிலும் பங்கேற்காத இவர், அடுத்த இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் (அக்டோபர் 19-25) களமிறங்க உள்ளார்.
இதற்கு முன், இந்தியா வரும் ஆஸ்திரேலிய 'ஏ' அணி, இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் (லக்னோ), மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகள் கான்பூரில் வரும் செப்டம்பர் 30, அக். 3, 5ல் நடக்க உள்ளது.
இதற்கான இந்திய 'ஏ' அணியில் ரோகித் விளையாட முடிவு செய்துள்ளார். இது ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக, சிறந்த பயிற்சியாக அமையலாம்.
கடைசி தொடரா
இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்,' 38 வயதான ரோகித், 2027 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார், வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார். இது அவருக்கு கடைசித் தொடராக இருக்கும்,' என செய்தி வெளியாகின.
மேலும்
-
இன்று இனிதாக ... (22.08.2025) செங்கல்பட்டு
-
எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
-
தடுப்பூசி போட்ட போது மயக்கம் 2 மாணவியருக்கு சிகிச்சை
-
. மாநில அளவிலான விளையாட்டு போட்டி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர் தேர்வு
-
பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொன்ற போதை நபர்
-
சோமனஹள்ளி அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் போராட்டம்