எல்லையம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

செய்யூர்:எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன.

ஓதியூர், முதலியார்குப்பம், நயினார்குப்பம், செய்யூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடைகளில், அதிக கட்டணம் கொடுத்து,'பாட்டில்' குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.

எனவே, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த, பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement