காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி

வின்ஸ்டன்-சலேம்: அமெரிக்காவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ஆஸ்டின், மெக்சிகோவின் சாண்டியாகோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 2-6 என தோற்ற பாம்ப்ரி ஜோடி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதில் பாம்ப்ரி ஜோடி 10-4 என அசத்தியது.
ஒரு மணி நேரம், 13 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-4 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் இந்தியாவின் போபண்ணா, மொனாக்கோவின் ரொமைன் அர்னியடோ ஜோடியை சந்திக்க உள்ளது.

Advertisement