உலக பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து

பாரிஸ்: உலக பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் சிந்து, உலகின் 'நம்பர்-2' சீனாவின் வாங் ஜி யி மோதினர். உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள சிந்து 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 19-21, 21-12, 21-15 என ஹாங்காங்கின் டாங் சுன் மேன், டிசே யிங் சூட் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement