அமெரிக்க பள்ளியை தாக்கியவரின் துப்பாக்கியில் இந்தியாவின் பெயர்

வாஷிங்டன்: மின்னியாபோலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரின் துப்பாக்கியில், 'அணு ஆயுத இந்தியா, டிரம்பை கொல்லுங்கள்' போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னியாபோலிசில் கத்தோலிக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பள்ளி குழந்தைகள் மீது, நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில், இரண்டு மாணவர்கள் பலியாகினர். மேலும், 14 மாணவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவரும் இறந்து கிடந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவருடைய பெயர் ராபின் வெட்மேன், 23, என்பதும், மூன்றாம் பாலினத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய வெட்மேன், தாக்குதலுக்கு முன் தன் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தாக்குதல் குறித்த குறிப்புகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், அவர் வைத்திருந்த துப்பாக்கியில், 'டிரம்பை கொல்லுங்கள், இப்போதே டிரம்பை கொல்லுங்கள், இஸ்ரேல் விழ வேண்டும், இஸ்ரேலை எரிக்க வேண்டும், அணு ஆயுத இந்தியா' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும்
-
இந்திய மக்களால் பொறுத்து கொள்ள முடியாத ஒன்று: ராகுலை மன்னிப்பு கேட்க சொல்கிறார் அமித்ஷா!
-
எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்
-
என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்
-
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!
-
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
-
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு