இந்திய மக்களால் பொறுத்து கொள்ள முடியாத ஒன்று: ராகுலை மன்னிப்பு கேட்க சொல்கிறார் அமித்ஷா!

50


பாட்னா: ''பீஹார் பேரணியில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை திட்டியதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: ராகுல் இடம் சிறிதளவு நல்லெண்ணம் மீதமிருந்தால், அவர் மோடியிடமும், அவரது மறைந்த தாயாரிடமும், இந்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். கடவுள் அனைவருக்கும் ஞானத்தைக் கொடுக்கட்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது.

கண்டிக்கிறேன்




மோடியின் தாயார் ஒரு ஏழைக் குடும்பத்தில் வாழ்க்கை வாழ்ந்து, தனது குழந்தைகளை மதிப்புகளுடன் வளர்த்து, தனது மகனை நம்பிக்கைக்குரிய தலைவராக்கினார். அத்தகைய வாழ்க்கைக்கு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இந்திய மக்களால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. அரசியல் வாழ்க்கையில் இதை விட பெரிய வீழ்ச்சி எதுவும் இருக்க முடியாது, அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


காங்கிரஸ் தலைவர் நடைபயணத்தின் போது பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் கண்டிக்கத்தக்க செயலைச் செய்துள்ளனர். நான் அதைக் கண்டிக்கிறேன். ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசியுள்ளனர்.


@quote@வெறுப்பு கலாசாரம் quote
அரசியலில் வெறுப்பு கலாசாரத்தை பரப்புவதற்கு காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் எவ்வளவு அதிகமாக துஷ்பிரயோகம் செய்கிறதோ, அவ்வளவு அதிகமாக பாஜ வெற்றி பெறுகிறது. ராகுல் நடைபயணம் மூலம் பீஹாரில் மக்களை தவறாக வழி நடத்துகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement