சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

பீஜிங்: ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இன்று(ஆகஸ்ட் 30) சீனா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். அங்கு இரு நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிறகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவையும் சந்தித்து பேசினார்.
தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
7 ஆண்டுகள் கழித்து
பிரதமர் மோடி 2019ம் ஆண்டுக்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்து சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டது. அது, மீண்டும் மெல்ல மெல்ல சீரடைந்து வருவதன் அடையாளமாக இந்த பயணம் அமைந்துள்ளது.
பிரதமர் மோடி நெகிழ்ச்சி
தியான்ஜெனில் உள்ள ஓட்டலில் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை வெளிப்படுத்திய சீன நாட்டு கலைஞர்களை கண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியடைந்தார். மேலும், ஏராளமான சீன வாழ் இந்திய மக்கள் திரண்டு நின்று பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.












மேலும்
-
தனியாரிடம் மின்சாரம் வாங்க ஆணையம் அனுமதி
-
தங்க கடத்தல் முறைகேடு: 6 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
-
வடமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
-
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
-
திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து: அதிகாரிகள் அலட்சியத்தால் கலெக்டர் அதிரடி
-
மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என நிரூபித்தால் விமான டிக்கெட் அமைச்சர் சுப்பிரமணியன் சவால்