தனியாரிடம் மின்சாரம் வாங்க ஆணையம் அனுமதி

6

சென்னை: தனியார் நிறுவனங் களிடம் இருந்து மின்சாரம் வாங்க, வரும் 2026 பிப்ரவரி முதல் மே மாதம் 15ம் தேதி வரை, மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

வரும் 2026 கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த சமயத்தில், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய, பிப்., 1 முதல் மே 15ம் தேதி வரை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க, ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கேட்டது. இம்மனுவை விசாரித்த ஆணையம், மின்சாரம் வாங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, 2026 பிப்ரவரியில் தினமும் 24 மணி நேரம், 450 மெகா வாட்; மாலை 6:00 முதல் இரவு 12:00 மணி வரை உச்ச நேரத்தில், 720 மெகா வாட்; மார்ச்சில் தினமும் 24 மணி நேரம், 950 மெகா வாட்; மாலை முதல் இரவு வரை உச்ச நேரத்தில், 1,520 மெகா வாட்.

ஏப்ரல் முழுதும் தினமும், 1,500 மெகா வாட், மாலை உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட்; மே மாதத்தில், 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும், 1,500 மெகா வாட், உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement