உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம்: முன்னாள் பார்லி சபாநாயகர் சுட்டுக்கொலை

கீவ்: உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள கட்டடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. தெற்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி லிவிவ் உயிரிழந்தார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார். கொலையாளியைத் தேடும் பணி நடந்து வருகிறது.


மேலும்
-
தனியாரிடம் மின்சாரம் வாங்க ஆணையம் அனுமதி
-
தங்க கடத்தல் முறைகேடு: 6 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு
-
வடமங்கலம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
-
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
-
திருவள்ளூரில் ரூ.12.97 கோடி பணிகள் ரத்து: அதிகாரிகள் அலட்சியத்தால் கலெக்டர் அதிரடி
-
மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புக்கடிக்கு மருந்தில்லை என நிரூபித்தால் விமான டிக்கெட் அமைச்சர் சுப்பிரமணியன் சவால்