வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

2


சென்னை: சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடக்கிறது.


சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடபழனி, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

தியாகராய நகரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கெமிக்கல் நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement