பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு

சென்னை: ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது நுகர்வோர் நம்பிக்கையை ஊக்கப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறைய உள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாள இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பாக, ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடிக்கும், ஜிஎஸ்டி வரி விகிதத்தை கட்டமைக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் பொருட்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்கி இருப்பது முன்னேற்றத்தை உறுதி செய்யும். இது நுகர்வோர் நம்பிக்கையை ஊக்கப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடணும்: சிங்கப்பூர் பிரதமர் சந்திப்புக்கு பிறகு மோடி வலியுறுத்தல்
-
பறவை மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து
-
தமிழகத்தில் வரும் செப் 8, 9ல் கனமழைக்கு எச்சரிக்கை: வானிலை மையம்
-
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
-
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்