அதிமுகவை விசிக பெரிதும் மதிக்கிறது: திருமாவுக்கு வந்தது திடீர் அக்கறை!

மதுரை: ''அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
நிருபர்: தேஜ கூட்டணியில் இருந்து முக்கிய தலைவர்கள் தொடர்ந்து வெளியேறுகின்றனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முக்கிய தலைவர்கள் சொல்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
திருமாவளவன் பதில்: இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அந்த கட்சிக்கு உள்ளே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார்கள். அவர் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார்.
ஆனால் இன்னும் அவர் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாக சொல்லலாம். என்றாலும் கூட, இது அவர்களின் உட்கட்சி விவகாரம்.
அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.




மேலும்
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
-
திருப்பதி அருகே விண்வெளி நகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு
-
ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
மணல் கடத்தலை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்: அஜித் பவார் விளக்கம்
-
ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்; டிரம்ப் ஆலோசகர் கருத்துக்கு இந்தியா பதிலடி