இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

புதுடில்லி: "இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும். இந்த முடிவு தேச நலனுக்கு முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்டது. நமது தேவைகளுக்கு ஏற்றதை வாங்குவது நமது முடிவு, எங்கிருந்து எண்ணெய் வாங்குகிறோம், அதை நாம் தீர்மானிக்க வேண்டும். லாபம் ஈட்டுவதற்கு குறுக்குவழிகள் எதுவும் இல்லை.
விலை குறையும்
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சுமையாக விழும் மறைமுக வரியைப் பற்றி நாம் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்து பொருட்களில் விலை குறையும்.
ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
கட்டுக்குள் வரும்
சில பொருட்களைத் தவிர அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது. சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.








மேலும்
-
புரோ கபடி: மும்பை அணி வெற்றி
-
வாகனங்களின் விலையை ரூ.1.45 லட்சம் வரை குறைக்கிறது டாடா மோட்டார்ஸ்
-
'அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்வீர்?' ஐ.டி., நிறுவனங்களுக்கு அதிபர் நேரடி அழுத்தம்
-
தெற்கு மண்டலம் ரன் குவிப்பு: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்தியாவின் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்!
-
செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்