திருப்பதி அருகே விண்வெளி நகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

2


திருப்பதி: ஆந்திராவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான கொள்கைகளை அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு தனியார் செயற்கைக்கோள்கள் அங்கிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்றார்.



விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் தகவல் மையம் முதல் விண்வெளி ஆய்வு வரை ஆந்திராவை தொழில்நுட்பத்துக்கான மையமாக மாற்றுவதற்கான திட்டங்களை வெளியிட்டார். இதில் லேபாக்ஷி மற்றும் திருப்பதியில் இரண்டு விண்வெளி நகரங்கள் அமைக்கப்படும். திருப்பதியில் தனியார் செயற்கைக்கோள்கள் தயாரித்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படும். அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளது போல், ஆந்திராவின் விண்வெளி நகரில் இருந்து தனியார் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்றார்.


பல்கலை, ஆராய்ச்சி அமைப்புகள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உதவும் வகையில் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிவித்த சந்திரபாபு நாயுடு, அமராவதியில் வரும் 1ம் தேதி முதல் குவாண்டம் கம்ப்யூட்டர் செயல்பட துவங்கும்.


தகவல் தொழில்நுட்பத்துறையில் கடந்த ஆண்டு 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. கூகுள், டிசிஎஸ், காக்னிசன்ட் நிறுவனங்கள் மூலம் விசாகப்பட்டினம் மிகப்பெரிய தகவல் மையமாக மாறும் எனவும் கூறினார்.

Advertisement