வர்த்தக வாகன விற்பனை 6.53 சதவீதம் உயர்வு

சென்னை:ஆகஸ்ட் மாத வர்த்தக வாகன விற்பனை, 6.53 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டு ஆகஸ்ட்டில், 69,199 வர்த்தக வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு நிதியாண்டு ஆகஸ்ட்டில், 73,718 வாகனங்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை, 10 சதவீதம் உயர்ந்து, 29,863 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. அசோக் லேலாண்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை, 5 சதவீதம் உயர்ந்து, 15,239 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அதேபோல் மொத்த விற்பனையில், வால்வோ ஐச்சர், 9.5 சதவீதமும், மஹிந்திரா 13 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. அதிகபட்சமாக, மாருதி சுசூகி நிறுவனத்தின், இலகுரக வாகன விற்பனை, 11.11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement