இடையூறாக வாகன நிறுத்தம் போக்குவரத்து பாதிப்பு
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதியில் கார், வேன், இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, மந்தாரக்குப்பம் கடைவீதி வழியாக தினசரி பஸ், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இதனால், இச்சாலையில் எப்போதும் பிசியாகவே காணப்படும்.
ஏராளமான தனியார் மண்டபங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள், கடைகள் உள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் தங்களின் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நடக்கிறது. பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக அணி ஏமாற்றம்
-
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!
-
திமுகவுக்கு மாற்று தேஜ தான்: அண்ணாமலை உறுதி
-
ரஷ்யா தாக்குதல்: பென்சன் வாங்க காத்திருந்த உக்ரைன் நாட்டினர் 21 பேர் பலி
-
சியாச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
-
ஆபரேஷன் சிந்துாரில் 24 மணி நேரமும் உழைத்த 400 விஞ்ஞானிகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
Advertisement
Advertisement