சியாச்சினில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

7

புதுடில்லி: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். இவ்வளவு உயரமான மலைத்தொடரில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுகிறது.



இந்நிலையில், இன்று(செப்.,9 ம் தேதி) சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத், உபி, ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த அவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அதில் சிக்கியிருந்த ராணுவ கேப்டன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.


இதற்கு முன்னர் 2021 ல் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேரும், 2019 ல் 4 ராணுவ வீரர்கள் மற்றும் 2 உதவியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement