தமிழக அணி ஏமாற்றம்

சென்னை: சென்னையில் புச்சி பாபு கிரிக்கெட் பைனல் நடந்தது. தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) 'பிரசிடென்ட் லெவன்', ஐதராபாத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஐதராபாத் அணி 376 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தமிழக அணிக்கு ராதாகிருஷ்ணன் (98), இந்திரஜித் (50), அஜிதேஷ் (57) சற்று கைகொடுத்தனர்.,
இருப்பினும் முதல் இன்னிங்சில் தமிழக அணி 353 ரன்னில் ஆல் அவுட்டானது. 23 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது ஐதராபாத்.
நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஐதராபாத் அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து, 178 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. தமிழக அணி இரண்டாவது இடம் பிடித்தது.

Advertisement